Sunday, December 27, 2015

நான்-பாட்டுப் பாடி(தாலாட்டுப் பாடி)

நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா.. 
நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
(1+MUSIC+1+MUSIC)
சிங்காரச்-சென்னை இல்லாமல்-இங்கே தண்ணீரில்-நின்றோமே கன்னையா
(2) 
பேயாக ஓயாத மழை-பெய்ய-வானம் தரைவீழச் செய்தாயே கன்னையா
நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
(MUSIC)
போதாது-போதாது என-உன்னை மழை-கேட்டோம் ஆனாலும் இது-என்ன கண்ணா 
நூறாண்டில் வரலாறு காணாத மழை-தந்தாய் இதில் சென்னை முழுகட்டும் என்றா
கண்ணா 
இதில் சென்னை முழுகட்டும் என்றா
கடலினிலே துயில்பவன்-நீ மனிதனிடம் அதுபோல் திறமையில்லை
நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
(MUSIC)
அய்யா-உன் நெஞ்சம்-கல் அதனாலே கோவில்-உள் கல்லாக உருச்செய்து தானே 
அழகாகக் குடி-வைத்தார் அந்நாளில் என்-முன்னோர் உணர்ந்தேனே அதை இன்று நானே
மனிதன்-என்றால் புரிந்திருக்கும் இங்கிருந்தால் நிலைமை தெரிந்திருக்கும்
நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா

No comments:

Post a Comment