Wednesday, December 9, 2015

யாரு-யாருக்கு(நாலு பேருக்கு நன்றி)

வெள்ளத்தில் இழந்ததெல்லாம் சொல்லவோர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் உறைந்த கணம் நடந்ததோ புரியவில்லை
கண்  கொட்டுமுன் எனது-மேனி மூழ்கி-நான் திகைத்து-நிற்க எனக்கொரு இறைவன்-அல்ல 
ஆயிரம் இறைவன்-வந்தார் அதில் யாரு-யாருக்குச் சொல்வேன்
________________________

யாரு-யாருக்கு நன்றி நான்-கூறுவேன்-சொல்லு தம்பி 
(2)
பேர்-சொல்லாமல் விடாமால் உழைத்தே கை-கொடுத்துத் தூக்கி விட்ட
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
(MUSIC)

எனது-என்றும் எனக்கு-என்றும் சுகமாய் வாழ்ந்தது நேற்று
அதையனைத்தும் அழிப்பதற்கே திரண்ட வெள்ளம் இன்று
அந்த-வெள்ளம் தானே-வந்தாற் போல-என்-பால் வந்தார் காத்தார் (2)
இவர்கள்-இறைவன் இல்லை-என்றால் அந்த-ஒருவன் யாரோ தம்பி
யாரு நீ-சொல்லு தம்பி
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
பேர்-சொல்லாமல் விடாமால் உழைத்தே கை-கொடுத்துத் தூக்கி விட்ட
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
(MUSIC)

இன்பத்திலும் துன்பமுண்டாம் என்றார் ஆன்றோர்-அன்று
துன்பத்திலும் நன்மையுண்டாம் என்றிடும் அவர்-சொல் நன்று 

வெள்ளம்-கொண்டது வெறும்-பொருள்-பொன்னே 

தந்து-சென்றது நல்லோர் -அன்பே 
(2)
வார்த்தையாலே என்-சொல்லி-தம்பி அவருக்கே-நான் நன்றி சொல்வேன்
(Pause)
என்ன வென்று சொல்லுவேன் தம்பி
 
யாரு-யாருக்கு நன்றி நான்-கூறுவேன்-சொல்லு தம்பி
பேர்-சொல்லாமல் விடாமால் உழைத்தே கை-கொடுத்துத் தூக்கி விட்ட
யாரு-யாருக்கு நன்றி நான் கூறுவேன்-சொல்லு தம்பி
 
_____________

No comments:

Post a Comment