Monday, March 13, 2017

6 அம்மா

என்னத்தான் ஒருவனுக்கு வாய்த்த நல்ல மனைவி பரிவுடனும் அளவுக்கும் ,(சிலர் விஷயத்தில்) தகுதிக்கும்  மீறி அன்பைக் கொட்டி கவனித்துக் கொண்டாலும், அம்மாவின் நினைப்பு அவ்வப்போது வந்து ஏக்கத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது..!

* தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது. "

என்ற மஹாப் பெரியவாளின் சொல்லைப் படித்தவுடன், அம்மா ஞாபகம் வந்து , ஏக்கத்தைத் தந்தது ..!7 த்யாகம்

“பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது
நல்லறிவை விட கடவுளைக் குறித்த தியானம் சிறந்தது
த்யானத்தினும் சிறந்தது செயல் பலனை த்யாகம் செய்வது
அதன் மூலம் உடனடியாகச் சாந்தி கிட்டும்”

“பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது”  
இது கொஞ்சம் இடிக்கிறாப்பல இருக்கு. பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது தான் ஆனால் பயிற்சி இல்லாமல் நல்லறிவு எப்படி கிடைக்கும். அப்படியானால் பயிற்சியைத் தவிர நல்லறிவைப் பெற வேறு ஏதோ Short cut இருக்கறாப்லத் தெரியுது.
இங்கு நல்லறிவு என்பது Ultimate ஞானம் அல்ல. அதற்கும் முற்பட்ட சத்தைப் பற்றிய ஒரு அறிதல் (knowledge) என்று கொள்ளவேண்டும்.
இங்கு பயிற்சி என்பதற்கு,நாமாகச் சோதனை முறையாக பயிற்சியை மேற்கொண்டு Self experience மூலம்  நல்லறிவைப் பெறுதல் என்றும் கொள்ளலாம். அப்படிப்பட்ட சோதனை முறையாக பயிற்சியை மேற்கொண்டு நல்லறிவைப் பெறுதலை விடச் சீக்கிரமாய் வேறு ஒன்றின் மூலம் நல்லறிவைப் பெற்றால் அது உசிதம் தானே.
அப்படி வழி இருக்கிறதா?. இருக்கிறது.!
அது – நூல்களைக்(Scriptures) கற்பதன் மூலமோ , கற்ற ஒருவரிடம் நம்பிக்கை வைத்து அவரிடம் கேட்பதன் மூலமோ பெறுவது. இது,தானாகப் பயிற்சி செய்து உணர்தலை விடச் சுலபமாகும். (ஏதோ எனக்குத் தோன்றியது.. நீங்கள் வேறு அபிப்ராயம் இருந்தால் பகிரவும்..!)


அடுத்து, “த்யானத்தினும் சிறந்தது செயல் பலனை த்யாகம் செய்வது அதன் மூலம் உடனடியாகச் சாந்தி கிட்டும்”
பலன் த்யாகம் என்பதுதான் கீதை.
தியானத்தை விட பலன்-தியாகம் உயர்ந்தது என்றால் பலன்-த்யாகம் செய்து விட்டால், தியானம் செய்ய வேண்டாமா? என்ற கேள்வி எழலாம்.
முக்திக்கு ஒரேவழி யோகம் (த்யானம்) மூலம் தன்னையறிதல். அதை மேற்கொண்டே ஆகவேண்டும். ஆனால் த்யான மார்க்கத்திலும் பலன்-தியாகம் தேவைப் படுகிறது.
அதற்காக உலக விஷய காரியங்களிலும் பலன் த்யாக Attitude ஐ practice
செய்து பழகி வந்தால் Spiritual சாதனையின் போது பலன்-த்யாகம் என்பது ஸ்வபாவமாகி விடும்.
அதெல்லாம் சரி. த்யானம் செய்வது தன்னையறிதல் என்ற பலனுக்காகத்தான், அப்படி இருக்கும்போது, அதை எப்படித் துறப்பது?.

இதற்கு பதஞ்சலி யோக சூத்திரம் பதில் சொல்கிறது.
விபூதி பாதம் சூத்திரம் 51:
தத்வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம் 

உலகை மறந்த அண்ட உணர்வினையும் துறக்க கைவல்யம் கிட்டும்

உலகம்மறந்த தாகத்தோன்றும் அண்டமான உணர்விலே
விலகியேத்தான் தனித்திருக்கும் ஆன்மமந்த நினைவிலே
பழகியதனை பிடித்தம்கொண்டு இருந்திடாமல் துறந்திடு
அழகியதாம் விழுமியதாம் கைவல்யமே கொண்டிடு

த்யானத்தின் முடிவில்,சமாதியின் உயரிய நிலையில்,உலகை மறந்த அண்ட உணர்வு ஏற்படுகிறது (Supra Conciousness). அதையும் துறந்தால் தான் கைவல்யம் என்கிறது சூத்திரம். எனவே அப்படிப்பட்ட ஒரு துறவுக்கு நம்மைத் தயார் பண்ணத் தான் கீதை, “செய்யும் உலகக் காரியங்கள் எல்லாவற்றையும் த்யாக உணர்வுடன் செய்” என்று சொல்வதாகத் தோன்றுகிறது. மேலும் பதஞ்சலி சூத்திரம் , யோகத்தால் கிடைக்கும் விபூதிகளையும் துறந்து முன்னேற வேண்டும் என்று கூறுகிறது. உண்மையான துறவுக்கு நம்மைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்த உயரிய வாக்கின் பொருள் என்று தோன்றுகிறது .
நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?.
(இதை எழுதி பிறகு நான் படிக்கும்போது ,ஏதோ பிதற்றுகிறார் போல எனக்குப்படுகிறது.Please pardon me..!)..

Share your thoughts please..

Monday, March 6, 2017

15. உன் நினைப்பில் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில்-பதித்தேன்
(2)
இடர்-வர உனை-நாடி நான் பெறும்-இதம் பெறும்-கோடி
உன்-மகன் தலை-கோதி நீ தரும்-இதம் பெறும்-கோடி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
சோற்றை உண்ணும்-வேளை அங்கே உன்-கை வந்தது
சோற்றை உண்ணும்-வேளை அம்மா உன்-கை வந்தது
போதும் என்ற-போதும் வாயில்-அதுவே தந்தது
இன்னும் கொஞ்சம்-கண்ணே என்று-அன்பைப் பெய்தது
எதனுடன் இணை-கூற நீ அன்பினில் பல-ஆறு
நினைத்தால் ஏக்கம் எழுதே  ஆ.. படுத்தால் தூக்கம் கெடுதே  
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
 பிள்ளை தூங்கும் நேரம் உந்தன் எண்ணம் வந்தது
சோகம் பந்து-போலும் வந்து-நெஞ்சில் நின்றது
இனி-உந்தன் பரிவேது என்ற-ஏக்கத்தின் முடிவேது
இரவும் பகலும் உனையே ஆ.. நினைத்தால் முடிவும் இலையே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
வாடல் கொண்டு-பிள்ளை இங்கே தனியே-நின்றது (2)
வாடா எந்தன்-கண்ணே என்ற குரலைத் தேடுது
அம்மா உன்னைத்-தேடி உள்ளம் அழுதே நின்றது
நானழு..தழுதாச்சு என் கண்களும் காய்ஞ்சாச்சு
விரைவினில் வருவேன் அங்கே..ஆ..அதுவரை இருப்பாய் அன்பே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்
உறவினில் பலகோடி அவை உன்-மடி முன்-தூசி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்

அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்Monday, February 20, 2017

5. ஆழ்ந்த மனசாட்சி

“நல்ல புத்தகங்கள்,நல்ல நண்பர்கள்,ஆழ்ந்த மனசாட்சி-இதுவே சிறந்த வாழ்க்கை”

முதலில் சொன்ன நல்ல இரண்டு புரிகிறது. ஆனால் அது என்ன ஆழ்ந்த மனசாட்சி ? இந்த கேள்வி எல்லாருக்கும் எழுகிறது.
It’s hard to define it. But I can share my thoughts on it and would love to hear from others as well.

நல்லது,கெட்டது என்று பகுத்தறிந்து மனசாட்சிப் படி ஒரு முடிவை எடுப்பது, என்று எடுத்துக்கொண்டால். நல்லது எது, கெட்டது எது என்று நாம் கேட்டதை,படித்ததை,நாம் அறிவுறப்படுத்தப் பட்டதை வைத்து முடிவு எடுப்பது. ஒன்றை refer செய்து (mey be subconsciously) முடிவு எடுப்பது or தெளிவடைவது. இது முதல் நிலை என்று கொள்ளுவோம். பிறகு ஒரு வயதிற்கு மேல், அல்லது ஒருநிலைக்கு மேலான முதிர்ச்சியை நாம் அடைந்த பிறகு. நமக்குள் நாமே சில ஐடியாக்களை வரக் காண்கிறோம் கொள்கிறோம். Sometimes, we say that, it is my principle to do or NOT to do certain things..etc. The “Principle” mentioned here is formed by way of ideology that we get/ for ourselves in the next stage and to some extent is evolutionary. Whether such ideologies are perfect or ரெண்டுங்கெட்டானா என்பதெல்லாம் தனி Topic.

இப்படியே மேலும் மேலும் முதிர்ந்து சென்றால் வருவது தான் ஆழ்ந்த மன சாட்சி.
It happens through spiritual maturity got out of intense Saadhanaa. To an extent we can compare this to a stage where you are guided by intuition. (Don’t take that being guided by intuition alone is ஆழ்ந்த மனசாட்சி)

In some cases, ஆழ்ந்த மனசாட்சி என்பது தர்ம சங்கடமான விஷயங்களில் ஒவ்வொன்றுக்கான மூல காரணத்தை மனதில் ஸ்புரிக்கச் செய்கிறது, which in turn arms you with the ability to view situations compassionately in relation to its cause, so that you make only the right decision.
ஆழ்ந்த மனசாட்சி என்பது முடிவு எடுக்க உதவுவது மட்டுமல்ல, தர்ம சங்கடங்களை யூகித்துத் தடுத்து நிறுத்தும் ஆற்றலையும் கொடுக்கிறது
So, ஆழ்ந்த மனசாட்சி can be described in one word as ஆன்ம பலம்.
மனசாட்சி என்பது பல நிலைகளின் (stages) பாற்பட்டது. ஒவ்வொரு நிலையிலிருந்தும் முன்னேறிப் பெறும் முதிர்ந்த நிலை தான் ஆழ்ந்த மனசாட்சி.
மனசாட்சி என்பதை Conciousness என்று கொண்டு சிந்திக்குங்கால் மேலும் தெளிவு பிறக்கும்.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சவிதர்க்க சமாதி மற்றும் நிர்விதர்க்க  சமாதி இரண்டும் இதைப் போன்ற satges of consciousness தான். இதைக் கொண்டு தான் நான் மேற்கண்டவாறு Interpret செய்கிறேன்.

சவிதர்க்க  சமாதி
பெயர்/வார்த்தை, அதன் பொருள் , உருவம் ,பொருளைப் பற்றிய அறிவோ (knowledge based on Logic) அல்லது ஊகமோ (Imagination – Deduction) இருக்கும் சமாதி நிலை சவிதர்க சமாதி ஆகும்.
இந்த நிலையிலும் மேல் கூறியவை இருக்கும் வரையில் (இருப்பதாலே ) மயக்கத்துக்கு இடமுண்டு.
அலையிலாச் சமாதியே எனினுமுண்டு மீதியே
பெயருமன்றி  பொருளதன்றி  உருவின்பதிவும் தேவையே
பெயரில்பெயரின் பொருளில்பொருளின் அறிவில்இல்லை தூய்மையே
மயக்கமிந்த மூன்றினாலும் விளையக்கூடலாகுமே..!   
  
நிர்விதர்க்க சமாதி
பெயர், பொருளின் ஞானம் (ஊகத்தின் அன்றி தர்க்கத்தின் பாற்பட்டதான) நினைவுப் பதிவின் துணை இல்லாமல் பொருள் விளக்கம் தோன்றுகின்ற சமாதி நிலையே நிர்விதர்க்க சமாதி. (தர்க்கம் = logic ).
நிர்விதர்க்கம் என்பது நினைவின் பதிவுஅற்றது
நின்றவந்த பதிவிலாகும் மயக்கம் தன்னை வென்றது
கற்பிக்கவோர் துணையிலாது தானேஅறியப் பெற்றது

சொற்பதத்தில்  அடங்கிடாத உண்மையிங்கே  மின்னுது ..!
__________________

Friday, February 17, 2017

4. எனைத்தானும் நல்லவை கேட்க

"எனைத்தானும் நல்லவை கேட்க  அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்"

இது மிக மிக அழகான குறள். (எல்லா குறளும் தான் அழகு, அற்புதம்,அருமை ).
இதன் பொருள்:
எத்துணை சிறிதாயினும் நல்லவற்றைக் கேட்க அது அத்துணை சிறிதாயினும் நிறைந்த பெருமை தரும்.
இதில் எனைத்தானும் என்பதற்கு எவ்வளவு சிறிதாயினும், என்றென்றும்,எத்தகையதாயினும் என்று பல பொருள்கள் உண்டு.
இந்த குறளில் இவை எல்லாமே பொருந்தும். என்றாலும் எனக்கு எத்துணை சிறிதாயினும் என்று தான் திருவள்ளுவர் சொன்னதாகப் படுகிறது.

இன்னொரு குறள் using “எனைத்தானும்” பார்ப்போம்
"எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை."
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
இங்கு எனைத்தாயினும் என்பதற்கு எவ்வளவு சிறியதாயினும் ஒன்றே பொருத்தம். மேற்கூறிய மற்ற இரண்டு பொருள்களும் அவ்வளவாகப் பொருந்தாது. எனவே வள்ளுவர் mean பண்ணது எவ்வளவு சிறியதாயினும் என்றே நான் கொள்கிறேன்.

இது போகட்டும் மீண்டும் முதல் குறளுக்கு வருவோம்…!

இங்கு திருவள்ளுவர் நல்லவை சிறிதாயினும் கேள் என்று  கேள்வி அதிகாரத்தில் சொல்லியுள்ளார். நல்லவை சிறிதேனும் கல் என்று சொல்லுகிறாற்போல் கல்வி அதிகாரத்தில் சேர்க்கவில்லை. இதில்தான் விஷயமே இருக்கிறது. கல்வி ஞானத்தை விட கேள்வி ஞானம் சிறந்தது.
படிக்காட்டாலும் பரவாயில்லை. கேளு. கேட்டுப் பழகு. சின்னதானாலும் கேட்டுப் பழகு. நீ நாளைக்கு த்யானம் செய்யும்போது, படிக்கப் போவதில்லை எழுதப் போவதில்லை, நினைக்கப் போகிறாய். அப்பொழுது இறைவன் பேச்சைக் கேட்கப் போகிறாய். அவன் பேச்சு சிறியதாய்த் தான் இருக்கும். ஆனால் சீரியதாய் இருக்கும். சிறியதாய் ( faint) கேட்கும் அதை உன்னிப்பாகக் கேட்கவேண்டும். இப்பொழுதே அதற்குப் பழகு.
The first indication of advancement in Dhynam is hearing divine musical sound of varius types and intensities. If you are not properly trainined in listening, you will start getting excited and stop listening. தற்காலத்தில் அறிவு வளர்ச்சியின் முதல் அறிகுறியே Stop listening தானே. நான் ஏன் கேட்கணும் ?. நான் கேட்கலைன்னா . நான் என்னை ஏன் என்று கேட்காது. நான் என்னை விட்டு  வெளியில்இன்னும் தூர சென்று ஏதேதோ கேட்டுக்கொண்டு கெட்டலைவேன். இங்கு கெடுவது என்பது கெட்ட விஷயங்களைப் பற்றுவதை சொல்லவில்லை. கெட்ட  = இல்லாமல், as in ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
வெளியில் சென்று நல்ல விஷயங்களில் ஈடுபட்டாலும், நம் குறிக்கோளை அடைய ஏதுவான Shortest பாதையிலிருந்து விலகி, அந்த பாதை இல்லாமல்,போவதைத் தான் சொல்கிறேன். அதீதமான ஞானமும் கூட யோகத் தடை என்று சங்கரர் கூறுகிறார். பதஞ்சலி கூறுகிறார். அவ்வாறான அதீத (தேவையில்லாத) விஷயங்களை விட்டு , Just required மட்டும் கேட்டுச் செல் என்பதே சான்றோர் வாக்கு. 

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். நல்லது எதுவும் சிறியதில் தான் திட்டவட்டமாகச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளியிட முடியும். பெரியதாக அல்லது பலதாக confusion arises. எனவே தான் , பெரிய நல்ல விஷயங்கள் எல்லாம் சூத்திரங்கள் ஆயின. ஜோதிட சூத்திரம்,பிரம்ம சூத்திரம்,பக்தி சூத்திரம், யோக சூத்திரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 
எனவே சின்னது தானே என்று ஒதுக்காமல் , சின்னதே நல்லது என்று நல்லதே கேட்டிரு ..

ரெண்டக்காவே தேவலாம்டா சாமி …. !!! 

Tuesday, February 14, 2017

GODSIP

3 Why Search the GOD who is in me and everywhere

Why search for GOD the OMNI Present, who is present in me too?
There has been this question in many a minds (every mind?) and has been asked many a times.
I am neither trying to answer nor question this question. But, thought some thoughts on this will help us while-away a little-while in a worth-while manner..!
(ஐயா சாமி ..!  இப்பவே கண்ணைக் கட்டுதேன்னு சொல்றது காதுல விழுது ..இருந்தாலும் தொடர்கிறேன்..☺

அறிவுப் பூர்வமாக நாம் தெரிந்து கொண்ட உண்மையை உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சியே இறை தேடல் என்று கொள்ளலாம். . ( Listen to the speech on the difference between Gnaana and Knowledge by Rajaji that appears as an introductory talk in M.S’s Bhajagovindam Cassete) 

It’s a journey from Saguna Brahmam to Nirguna Brahmam.
According to Aadhi Sankara’s advaitha philosophy, God is supra consciousness and so is jeevaathma. But Jeevaathma does not know this. ஜீவாத்மா இதை உணர்தலே (OMNI உணர்வுறுதலே) முக்தி எனப்படுகிறது. தனி சக்தி என்ற நினைப்பிலிருந்து இறை முக்தி என்னும் உணர்தலுக்கு ஒரு முயற்சி ஒரு சாதனை தேவைப் படுகிறது அதுதான் இறை தேடல். எங்கு தேடிக் காண்கிறாய் என்பது முக்கியமில்லை; கண்டு கொள்ளுதலே முக்கியம். காணும் உந்துதலே முக்கியம். அதையே தேடல் என்று சொல்கிறார்கள்.
Search is not founded on doubt, it’s founded on faith. இருக்கு என்ற நம்பிக்கையில் தேடுவதே இறை தேடல்.

 “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி போவது ஏனோ” –When one says God is Everywhere, the above question itself answers it …
இல்லாத இடம் என்று ஒன்றே இல்லை எனவே இல்லாத இடம் தேடித் போவது என்பதும் இறைவன் இருக்கும் இடத்தைத் தேடிப் போவது தான். இறை நம்பிக்கை வந்த பிறகு , தேடல் என்பது நாடல் என்று ஆகிவிடும். எனவே இறை தேடல் என்பது இறை நாடலே. இறைவனை எங்கும் என்றும் நாடிச் செல்லலாம்..!

In context of Search ( Not necessarily directly connected with this topic), I want to bring out an interesting anomaly..!
“கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனப் புகுந்து தடவியதோ ஒருவன் தன் புனித வாளி “

ராமரின் பாணங்களால் துளைத்துச் சல்லடையாக்கப்பட்ட உடலைப் பற்றி கம்பர் வர்ணிக்கிறார்.
ராவணனின் உடலை துளைத்த வாளி(அம்பு) ,ஒவ்வொரு அணுவிலும் புகுந்து ஜானகியைக் கவர்ந்த  காதல் உள்ளே இருக்கிறதா என்று தேடியது போல் உள்ளது என்று சொல்கிறார் கம்பர். (தடவியது என்பது அணு அணுவாகத் துளைத்துத் தேடியது என்றாகும்)

இதன் பொருள் கீழ்க்கண்ட இரண்டுமாகக் கொள்ளலாம்

1)  தேடித் தேடிப் பார்த்துவிட்டது; ராவணன் செத்தது தான் மிச்சம் காதல் அங்கு எள்ளளவும் இல்லை.
2)  தோண்டித் துருவி எள்ளத்தனையும் மிச்சம் வைக்காமல் இருக்கும் காதலைக் களைந்து எடுத்து விட்டது ராமன் வாளி

இதில் எது சரி ? ( இரண்டும் சரி என்பது சரியா ? )

நல்லவற்றைத் தேடும் போது, இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் பொல்லாவற்றைத் தேடும்போது , இருக்கக் கூடாது, இல்லாமல் போகாதோ என்று நினைத்தும் தேடுவது சான்றோர் இயல்பு.


குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்”
என்பது சான்றோர் இயல்பு என்று வள்ளுவர் கூறுகிறார்.  ஆனால் இறைவனின் இயல்போ;

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றை குணம் ஆக்கி மிக்கக் கொளல்” என்றாகிறது. 
ராமாயணத்தில் ராமரை விட ராவணனைப் புகழ்ந்தவர் யாருமில்லை என்பதே இதற்கு ஒரு சான்று.

____________________
“அண்டம் படைத்திங்கு எல்லாமும் ஆனவன்
அணுவின் உள்ளேயும் அணுவே நீ ஆனவன்
தொண்டர்கள் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன்
என்னிலும் உள்ளோனே "
_______________________________________________


GODSIP-MENU