Tuesday, January 24, 2017

அந்த காக்கா நம்ம சொந்த காக்கா




எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
வந்து-வந்துச் சாப்பிட..நிந்து-நிந்துக் கூப்பிடும் 
எங்க-வீட்டு ஜன்னலிலே அந்த-காக்கா
சட்டமாக வந்து-நின்னு சத்தமாக்-க..ரைஞ்சு-பொண்ணு 
போலத்-தலை சாச்சுப்-பாக்கும் ரொம்ப-ஷோக்கா
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
தத்தித்-தத்தி கிட்ட-வந்து கொத்திக்-கொத்தித் தின்னுமது
நான்-கொடுக்கும் பூந்தி-எல்லாம் ரொம்ப-பாங்கா
கெட்டித்தயிர் வச்ச-இடம் சுத்தமாமாய்ப்-ப..ளிச்சிடவே
துளி-மிச்சம் வைக்காம நக்கும்-நேக்கா
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
பால்-தயிரின் மேலே-உள்ள அந்த-ஏடு 
அதை ஓடிவந்து தின்னும்-அது ஆர்வத்தோடு
கூவிக்-கூடி ஒத்துமையாத் தின்னும்-பீடு 
அதப் பாக்குற-நாம் சண்டை-போட்டா வெக்கக்-கேடு
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
பிச்சிப்-போடும் இட்டிலியத் தொட்டிடாது 
அது கேட்டதை-நாம் தந்திடாம விட்டிடாது
ஏமாத்த இடம்-அது தந்திடாது 
என்றும் ஒம்-பருப்பு-அதுங்கிட்ட வெந்திடாது
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
நாம-போனா சொத்துச்-சண்டை முத்திப்-போகும் 
காக்கா ஒண்ணு-போனா சுத்திக்-கத்தி துக்கம்-காட்டும் 
எத்தனையோ பாடம்-அது சொல்லிக்காட்டும்
அது அத்தனைக்கும்-அஞ்சறிவு ப்ராணியாக்கும்
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
வெண்ணையின்னா அதுக்கு-பார் ரொம்பப்-பிடிக்கும் 
அதைத் கேட்டுக்-கேட்டுக் கொஞ்ச-நேரம் அடம்-பிடிக்கும்
என்னத்தைத்-தான் தின்னாலும் அனுபவிக்கும் 
நான் இல்லையின்னு சொன்னாலும் அனுசரிக்கும்
எப்படியோ வந்திடுதே அந்த-காக்கா 
கணம் தப்பாம-வரும்-அது என்ன-க்ளாக்கா
பூரி-ரொட்டி வைக்க-நூறு தின்னும்-காக்கா 
அது சொந்த-ஊரு-வடக்கத்தி டில்லியோ அக்கா 
எங்கிருந்து வந்தாலும் என்னமோ-அக்கா
என் குடும்பத்தில்-ஒண்ணு-பட்ட சொந்த-காக்கா

பித்துருக்கள் நம்மப்-பாக்க எண்ணுவாங்களாம் 
அந்த-காக்கா-போல வந்து-சோறு தின்னுவாங்களாம்
என்று-கதைச் சொல்லி-பண்பு ஊட்டுவாங்கலாம் 
எல்லா ஜீவனிலும் ஆண்டவனைக் காட்டுவாங்கலாம்

கட்டுக்-கதை என்று-சிலர் கேலி-பேசலாம்
அதைக் கண்டுக்காம விட்டுட்டு-நாம் அன்பைப்-பூணலாம் 
ஒண்ணொண்ணுக்கும் தேகம்-ரூபம் வேற-ஆகலாம்
அதை விட்டு-உள்ளப் போனாத்தான்-நாம் சாமி-பாக்கலாம்..!

எப்ப-வேணா வந்திடு-நீ எங்க-காக்கா 
ஒன்ன பாக்கலைன்னா போகும்-அந்த நாளு-ராங்கா 
சும்மா-இல்லை நெஜத்தைத்-தான் சொல்லுறேன்-காக்கா 
அம்மா-உன்னைப் போகச்-சொல்ல நான்-என்ன மக்கா..!
எப்ப-வேணா வந்திடு-நீ எங்க-காக்கா 
ஒன்ன பாக்கலைன்னா போகும்-அந்த நாளு-ராங்கா
---------------------



இன்னும் பிற




No comments:

Post a Comment